லாரியில் கடத்தி வந்த1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது
கடமலைக்குண்டு அருகே லாரியில் கடத்தி வந்த 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி
கண்டமனூர் போலீசார் நேற்று மாலை தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தேனியில் இருந்து கடமலைக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் லாரியில் அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் புகையிலை பொருட்கள் சாக்கு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்த டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story