பணியின் போது மதுபோதையில் இருந்த 2 போலீசார் பணி இடைநீக்கம்


பணியின் போது மதுபோதையில் இருந்த  2 போலீசார் பணி இடைநீக்கம்
x

2 போலீசார் பணி இடைநீக்கம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சாலை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தும் பணியிலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதில், திண்டல்-பெருந்துறை வரை உள்ள நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் முருகானந்தம், ஏட்டு ரவி ஆகியோர் சீருடை அணிந்தபடி மதுபோதையில் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்களிடம் விசாரணை நடத்தி, துறை வாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story