பனைமரத்தில் இருந்து விழுந்தவர் சாவு
பனை மரத்தில் இருந்து விழுந்தவர் இறந்தார்.
விருதுநகர்
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). விவசாயி. இவருக்கு வேதநாயகபுரத்தில் சொந்தமாக வயல் உள்ளது. இவரது காட்டில் உள்ள பனை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது லேசான மயக்கம் ஏற்பட்டதால் தவறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story