தலைமை தபால்நிலைய ஏ.டி.எம். மைய கதவு உடைப்பு
தலைமை தபால்நிலைய ஏ.டி.எம். மைய கதவு உடைப்பு
ஆர்.எஸ்.புரம்
கோவை டாடாபாத் ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி (வயது 51). இவர் ஆர். எஸ்.புரம் டிவி சாமி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தபால் அலுவலகம் முன்பு தபால் நிலையத்துக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்தின் மெயின் கதவு அருகே சிறிய கதவு உள்ளது. அந்த சிறிய கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக மீனாட்சி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தபால்நிலையத்துக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தின் சிறிய கதவு உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.