நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்


நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
x

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே நடுரோட்டில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது

கோயம்புத்தூர்

இடிகரை

கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 37). இவர் நேற்று மதியம் மேட்டுப்பாளையத்திற்கு தனது குடும்பத்துடன் காரில் சென்றார்.

காரில் ராஜேஷ்சின் தந்தை, மனைவி, 2 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் கார் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கேஸ் கம்பெனி அருகே வந்துகொண்டிருந்தது.

இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து காரில் வந்த செந்தில்குமார் (41) என்பவர் மேட்டுப்பாளையம்-கோவை சாலைக்கு செல்ல முயன்றார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷ் கார், செந்தில்குமாரின் கார் மீது மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த ராஜேசின் மனைவிக்கும், பழனிசாமிக்கும் காயம் ஏற்பட்டது. குழந்தைகள் மற்றும் ராஜே ஷ் காயமின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடுரோட்டில் கார் கவிழ்ந்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story