தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி


தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நகரமன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார்.

இதில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவன அலுவலர் பிரபாகரன் காணொலிக் காட்சி மூலமாக நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கழிவுநீர் கால்வாய், செப்டிக் டேங்க் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும்,

தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கைகளால் சுத்தம் செய்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்பு குறித்தும் விளக்கிக் கூறி, பாதுகாப்பாக மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story