எருமாட்டில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி


எருமாட்டில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 15 Aug 2023 1:00 AM IST (Updated: 15 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

எருமாட்டில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே எருமாடு பஜாரில் சேரங்கோடு, நெலாக்கோட்டை, ஸ்ரீமதுரை ஊராட்சிகள் இணைந்து சுற்றுபுற சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அனிபா, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஆணையாளர் குமார், துணைதலைவர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், பொதுமக்களும் வியாபாரிகளும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.


Next Story