ரவிச்சந்திரனுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை


ரவிச்சந்திரனுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை
x

ரவிச்சந்திரனுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.

மதுரை


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கப்பட்ட நிலையில், அவரது தாயார் தங்கியுள்ள தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் தங்கி வருகிறார். இந்தநிலையில் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் பரோல் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து ரவிச்சந்திரன் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு இருதய பரிசோதனை, ரத்த பரிசோதனை, உயர் ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் புறப்பட்டு தூத்துக்குடி சென்றார்.


Next Story