சுகாதார குழு கூட்டம்


சுகாதார குழு கூட்டம்
x

நெல்லை மாநகராட்சியில் சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கினார். இதில் சுகாதார நிலைக்குழு தலைவர் ரம்சான் அலி, சுகாதர நிலைக்குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி, அஜய், ஷேக் மன்சூர், மாரியப்பன், பாலம்மாள், சீதா, ஷபி அமீர் பாத்து, அம்பிகா, மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் இருப்பு வைக்கவும், அதுகுறித்து செயல் திட்டம் உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆனித்தேரோட்ட திருவிழாவின்போது, அந்த பகுதி முழுவதும் சுகாதாரமாக வைக்கவும், மருத்துவ வசதி செய்து கொடுக்கவும், தேவையான இடங்களில் குடிநீர் வசதி மற்றும் நடமாடும் கழிவறை வசதி செய்து கொடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுக்கும்போது ஏற்படும் இறைச்சி கழிவுகளை சுகாதார முறையில் அப்புறப்படுத்த தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெல்லை மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு வார்டுகளாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி 23-வது வார்டு நெல்லை டவுன் வெள்ளம்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story