ஆரணியில் அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு


ஆரணியில் அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2022 5:57 PM GMT (Updated: 12 July 2022 6:08 AM GMT)

ஆரணியில் அசைவ ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் ஆய்வு நடத்தினர்

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வந்த புகாரின்பேரில் அசைவ ஓட்டல்கள் இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர் திடீர் சோதனை நடத்தினார்.

ஆரணி நகரில் சமீப காலமாக அசைவ ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கெட்டுப்போன உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் பி. தமிழ்ச்செல்வி உத்தரவின்பேரில் களப்பணியாளர்களுடன் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் நேற்று இறைச்சியை தனியாக பிரித்தெடுக்கும் கடைகளிலும், அசைவ ஓட்டல்களிலும், இறைச்சி விற்பனை செய்யும் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனால் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டபின் ஓரிரு தினங்களில் மட்டும் குறைபாடில்லாமல் உணவு வழங்கப்படும் நிலையில் மீண்டும் தரமற்ற உணவே வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே தொடர்ந்து இறைச்சி கடைகள், ஓட்டல்களை கண்காணிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story