மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்
மயிலாடுதுறையில் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
சீர்காழி தாலுகா வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினரால் சுடப்பட்டு, பலத்த காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மீன் பிடிக்கச் சென்ற வானகிரியைச் சேர்ந்த சக மீனவர்களான செல்வகுமார், சுரேஷ், செல்லதுரை, மோகன்ராஜ் உள்ளிட்ட மீனவர்களும் காயமடைந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அந்த மீனவர்களிடம் மாவட்ட கலெக்டர் சம்பவம் குறித்தும், அவர்களது கருத்து மற்றும் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.அப்போது தாக்குதலுக்குள்ளான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.பாலாஜி மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் வானகிரி மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் வானகிரி மீனவ பஞ்சாயத்தை சேர்ந்த ராஜா கூறுகையில், இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் இதுவரை மத்திய அரசு பிரதிநிதிகள் யாரும் தங்களைச் சந்திக்காததைக் கண்டித்து அடுத்து வாரம் மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார். பாதிக்கப்பட்ட மீனவர் செல்வகுமார் கூறுகையில், இந்திய கடற்படையினர் தங்களை இந்தி தெரியாதா என்று கேட்டு தாக்கியதாக தெரிவித்தார்.