இதய தின விழிப்புணர்வு ஊர்வலம்


இதய தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலத்தை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.

சேலம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலத்தை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.

உலக இதய தினம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. மாணவ- மாணவிகள் இதயத்தை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு

தொடர்ந்து இதய தின கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கண்காணிப்பாளர் தனபால் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் தேன்மொழி, ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் டீன் வள்ளி சத்தியமூர்த்தி பேசுகையில், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதத்திற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 1,150-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கும் அதிநவீன இதய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாதம் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆஞ்சியோகிராம், 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய பொதுமக்கள் பயன் பெற வாய்ப்பாக அமையும் என்றார். இதில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story