வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 3:45 AM IST (Updated: 29 Jun 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் பெய்யும் சாரல் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


வால்பாறை


வால்பாறை பகுதியில் பெய்யும் சாரல் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.


கடும் பனிமூட்டம்


வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடந்த ஒரு வாரமாக அவ்வபோது விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வால்பாறையில் கடும் குளிர் நிலவி வருகிறது.


மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் வால்பாறை பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி செல்கின்றனர்.


சுற்றுலா பயணிகள் வருகை


வால்பாறையில் தற்போது இதமான கால சூழ்நிலை நிலவி வருவதாலும், பக்ரீத் விடுமுறையின் காரணமாகவும் அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.


வால்பாறைக்கு சுற்றுலா வருபவர்கள் மலைப்பாதையின் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பனிமூட்டத்தை ரசித்து செல்வதுடன், குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். பகல் நேரத்திலேயே பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-


போலீசார் அறிவுரை


வால்பாறையில் பருவமழை தொடங்கியுள்ளதால் பனிமூட்டம் நிலவி வருகிறது. பழக்கமான சாலை என்பதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்று வருகின்றனர்.


ஆனால் சுற்றுலா பயணிகள் பனிமூட்டத்தில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். சாலை தெரியாவிட்டால் சாலையோரத்தில் ஓய்வு எடுத்து விட்டு வெளிச்சம் வந்தபின்னர் வாகனங்களை இயக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.


மழையளவு


நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-


சோலையாறு அணை-26, மேல் நீரார்-53, கீழ் நீரார்- 27, வால்பாறை-17.



Next Story