கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
43 சிலைகள் வைக்க அனுமதி
கிணத்துக்கடவு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரம், அண்ணாநகர், கல்லாங்காட்டு புதூர், பகவதி பாளையம், தாமரைக்குளம் மாளேகவுண்டன்பாளையம், கோவில்பாளையம், கோடங்கி பாளையம், சிங்கையன் புதூர், சொக்கனூர், கொண்டம்பட்டி, அரசம்பாளையம், உள்ளிட்ட பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் 33 சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 10 சிலைகளும், மொத்தம் 43 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் விநாயகசதுர்த்தியை முன்னிட்டு அனைத்து சிலைகளுக்கும் பக்தர்கள் சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, தேங்காய், பழம், உள்ளிட்ட பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்தனர்.
இன்று ஊர்வலம்
இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் உள்ளூரிலேயே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 33 சிலைகளில் 32 சிலைகள் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன. மற்றொரு சிலை நாளை மறுதினம் கரைக்கப்படுகிறது. இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் கண்காணிப்பு மற்றும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.