சிங்கம்புணரியில் கனமழை


சிங்கம்புணரியில் கனமழை
x

சிங்கம்புணரியில் கனமழை பெய்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. அதன்படி 2 நாட்களில் சுமார் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சிங்கம்புணரி பெரிய கடை வீதி கால்வாய்கள் அனைத்தும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் மழை நீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிகர்கள் கால்வாய்களை அடைத்து வியாபாரம் செய்வதால் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சிங்கம்புணரியில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் சில வணிகர்கள் சாலைகளையும், கால்வாய்களையும் அடைத்து வியாபாரம் செய்வதால் மழை நீர் செல்ல வழி இன்றி சாலைகளில் தேங்குகிறது. இது போன்ற கால்வாயில் அடைப்பை ஏற்படுத்தும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை பேரூராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். ேமலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



Related Tags :
Next Story