திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை


திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை
x

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது.

தொடர்மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. அத்துடன் ஆறு, ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் திண்டுக்கல்லில் நேற்று காலையில் மழை பெய்தது. சாரல் மழையாக பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

அதேநேரம் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு இருந்தன. இதனால் வெயிலின் தாக்கம் இன்றி குளிரான காலநிலையே பகல் முழுவதும் நீடித்தது. மழை காரணமாக நாகல்நகர், வாணிவிலாஸ் மேடு, பழனி பைபாஸ் சாலை, திருச்சி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இதற்கிடையே மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கொட்டும் மழையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமே என்ற கலக்கத்தில் இருந்த பொதுமக்கள், காலை 7.30 மணிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததையடுத்து நிம்மதியடைந்தனர்.

இதேபோல் பழனி, நத்தம், கரந்தமலை, முளையூர் மலை, மொட்டை மலை, பூலான் மலை என மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு, விட்டு கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சிலர் குடைகளை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

ராட்சத மரம் விழுந்தது

கொைடக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு மஞ்சள்பரப்பு கிராமத்தில் பழமையான ராட்சத மரம் வேேராடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த மரத்தின் அருகில் இருந்த விநாயகர் கோவில் மற்றும் இளையராஜா என்பவருக்கு சொந்தமான வீடு சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேலும் 2 மின்கம்பகள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணலூர் ஊராட்சி தலைவர் லதா செல்வக்குமார் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர்.

பண்ணைக்காடு பிரிவு பகுதியில் இருந்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்லும் மலைப்பாதையில் பண்ணைக்காடு பிரிவு என்னுமிடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அப்பகுதி மக்கள் மரக்கிைளயை வெட்டி அகற்றினர். அதன்பின்பு போக்குவரத்து சீரானது.


Related Tags :
Next Story