தர்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது


தர்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 15 Nov 2022 12:45 AM IST (Updated: 15 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தர்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜாம்பவானோடையில் உள்ள அம்மா பள்ளி தர்காவில் மழையின் காரணமாக 40 அடி சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு எந்த அசம்பாவமும் நடைபெறவில்லை என தர்கா நிர்வாகத்தின் சார்பில் தர்கா பாரம்பரிய முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாயபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் இடிந்து விழுந்த சுவருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Related Tags :
Next Story