1 மணி நேரமாக பெய்த பலத்த மழை


1 மணி நேரமாக பெய்த பலத்த மழை
x

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்தில் கடைவீதிகளுக்கு வரும் மக்கள் கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் அவதியடைந்தனர்.

மன்னார்குடி பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக மன்னார்குடி நகரம் சவளக்காரன், சுந்தரகோட்டை, மூவநல்லூர், சேரன்குளம், காரிக்கோட்டை மேலவாசல் என மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

வெண்ணைத்தாழி விழா

இந்த மழையால் கோடை நடவு செய்துள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரம் நேற்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணைத்தாழி விழா நடந்தது.

இதனால் ஏராளமான தெருவோர கடைகள், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் கூட்டம் என மன்னார்குடி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திடீர் மழையால் சாலையோரம் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் மற்றும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் என பல தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.Related Tags :
Next Story