மன்னார்குடி பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை


மன்னார்குடி பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை
x

மன்னார்குடி பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை

திருவாரூர்

மன்னார்குடி பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 மணிநேரம் பலத்த மழை

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடைவெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை மன்னார்குடி பகுதியில் வானத்தில் கருமேகங்கள் திரண்டது. தொடர்ந்து மன்னார்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த 1 மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் இந்த மழையால் சிரமத்திற்கு ஆளாகினர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி, வடுவூர், காரிகோட்டை, கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, எள், பயிறு, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு இந்த கோடை மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story