சாத்தூரில் 2 மணி நேரம் பலத்த மழை
சாத்தூரில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சாத்தூர்,
சாத்தூரில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 4 மணிக்கு சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்தமழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை 6.15 மணி வரை நீடித்தது. இதனால் சாத்தூரில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கிராமப்புறங்களில் சாலையின் ஓரங்களில் உள்ள நீர்வரத்து ஓடைகள் முழுவதும் மழை நீர் நிரம்பி வழிந்தன. பெத்தரெத்துபட்டி, சின்னஓடைப்பட்டி, சங்கராபுரம், சுப்புலாபுரம், நள்ளி, புல்வாய்ப்பட்டி, குமாரபுரம், இருக்கன்குடி, எம்.நாகலாபுரம், வன்னிமடை, கணபதியாபுரம், தோட்டிலோவன்பட்டி, குமாரபுரம், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் பலத்தமழை பெய்தது.
மறுகால் பாய்ந்த கண்மாய்
இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறிய குளங்கள் நிரம்பின.. சாத்தூர் நகர் பகுதியில் 2 மணி நேரம் பெய்த பலத்தமழையினால் மரியன் ஊருணி கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்தது. சாத்தூர் நகர் பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழையினால் சாத்தூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. சாத்தூர் பஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்து நின்றதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.