கோவில்பட்டியில் 3 மணி நேரம் பலத்தமழை
கோவில்பட்டியில் வியாழக்கிழமை 3 மணி நேரம் பலத்தமழை பெய்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகலில் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. மாலை 3 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர். இதேபோன்று சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது. இதனால், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெப்பத்தின் தாக்கம் இதமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story