ஆலங்குளத்தில் பலத்த மழை
ஆலங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
1 மணி நேரம் மழை
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர சிரமப்பட்டனர். இந்தநிைலயில் ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்தி பட்டி, கொங்கன் குளம் சுண்டங்குளம், அம்பேத்கர் நகர், நேதாஜி நகர், தேவர் நகர், இந்திராநகர், பெரியார்நகர், அண்ணா நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஜெ.ஜெ. நகர், பாரதிநகர், வசந்த நகர், இருளப்ப நகர், ஏ.டி.ஆர் நகர், சிமெண்டு ஆலை காலனி ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 1 மணி முதல் 2 மணிவரை பலத்த மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
அத்துடன் இரவு வரை குளிர்ந்த காற்று வீசியது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், தொடர்ந்து பெய்தால் விவசாயம் செழிக்கும் எனவும் மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கூறினர்.