ஆனைமலையில் பலத்த மழை
ஆனைமலையில் பலத்த மழை
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் குளம், குட்டைகள் நிரம்பியதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்்தது. அதன்பின்னர் மழை பெய்வது நின்று வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது. பின்னர் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக கொட்டித்தீா்த்தது. அதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் தேங்கி நின்றது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story