அன்னவாசல், பொன்னமராவதி, திருவரங்குளம், காரையூரில் கனமழை


அன்னவாசல், பொன்னமராவதி, திருவரங்குளம், காரையூரில் கனமழை
x

அன்னவாசல், பொன்னமராவதி, திருவரங்குளம், காரையூரில் கனமழை பெய்தது.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் இன்று மாலை அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பெருமநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதியில் மரங்கள் ஒடிந்து விழுந்தன. இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் திருவரங்குளம் வட்டார பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அண்ணாசாலை காந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காரையூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென இடியுடன் கன மழை பெய்தது.

புதுக்கோட்டையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் சற்று இருந்தது. இந்த நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 6.30 மணிக்கு மேல் மழை லேசாக தூறியது. அதன்பின் இரவில் மழை தூறியபடி இருந்தது. சிறிது நேரத்திற்கு பின் மழை நின்றது.


Related Tags :
Next Story