சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை


சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை
x

சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்தது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் சதுரகிரி மலையில் உள்ள கருப்பசாமி கோவில் ஓடை, வழுக்கல் பாறை ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாணிப்பாறைக்கு செல்லக்கூடிய வழியில் உள்ள லிங்கம் கோவில் ஆற்றுப்பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. சதுரகிரி மலையில் பெய்த மழையினால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.



Related Tags :
Next Story