கம்பத்தில் பலத்த மழை:சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
கம்பத்தில் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கம்பத்தில் நேற்று காலை 10 மணி வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த காற்றுடன் சாரல் பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் கழித்து பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் சாலையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story