கரூர் மாவட்டத்தில் கனமழை
கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன மழை
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் இரவு சுமார் 7.50 மணியளவில் கருமேகங்கள் திரண்டு கனமழை பெய்தது.இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் தேங்கி நின்றது. இதனால் பணி முடிந்து வீட்டிற்கு வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
குளித்தலை
குளித்தலை பகுதியில் கல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளுமையான சூழ்நிலை நிலவியது. குளித்தலை நேற்று முன்தினமும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர்,கந்தம்பாளையம், மூலிமங்கம்,காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம்,செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர்,நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம்,தோட்க்குறிச்சி, அய்யம்பாளையம்,தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே கடுமையான வெயில் அடித்தது. இந்தநிலையில் அரவக்குறிச்சி, ஈசநத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடியும் கூடி மழை பெய்துது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் வயல் வெளிகளில் பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினமும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
நொய்யல்
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் ,பாலத்துறை, மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இந்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கரூர் மாவட்டத்தில்பல்வேறு இடங்களில் கனமழை ெகாட்டிதீர்த்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.