கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு


கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
x

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில், இன்று பகலில் லேசான சாரல் மழை பெய்தது. இதனிடையே மாலை 5½ மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் நகரை ஒட்டியுள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்அருவி, பியர் சோலா அருவி போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்த னர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story