கோத்தகிரியில் பலத்த மழை


கோத்தகிரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது.

நீலகிரி

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண காலநிலை நிலவி வருவதுடன், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் கோத்தகிரியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் இதமான காலநிலை நிலவியதுடன், கடும் பனிமூட்டம் நிலவியது.

பின்னர் மழை நின்றவுடன், பனிமூட்டமும் படிப்படியாக விலகியது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story