: குமரியில் பலத்த மழை


:  குமரியில் பலத்த மழை
x

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அதிகபட்சமாக கன்னிமாரில் 117.2 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அதிகபட்சமாக கன்னிமாரில் 117.2 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னிமாரில் 117.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-80.6, களியல்-12.2, குழித்துறை-4, நாகர்கோவில்-1, புத்தன்அணை-32.2, சுருளகோடு-36.2, தக்கலை-65.1, பாலமோர்-39.4, ஆரல்வாய்மொழி-7, கோழிப்போர்விளை-30.4, அடையாமடை-24.2, முள்ளங்கினாவிளை-9.4, ஆனைகிடங்கு-88 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-45.8, பெருஞ்சாணி-33, சிற்றார் 1-13.4, மாம்பழத்துறையாறு-89, முக்கடல்-50.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தண்ணீர் வரத்து

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அனைக்கு வினாடிக்கு 721 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 243 கனஅடி தண்ணீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 6 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 591 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது.

வீடு சேதம்

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக தோவாளை தாலுகாவில் ஒரு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. மேலும் திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடும், கிள்ளியூர் தாலுகாவில் ஒரு வீடும் பகுதியாக சேதம் அடைந்துள்ளது.

1 More update

Next Story