குமரியில் பலத்த மழை


குமரியில் பலத்த மழை
x

குமரியில் பலத்த மழை

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சிற்றார் 1-ல் 90.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. அதேசமயம் மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

அணைகளுக்கு நீர்வரத்து

குமாி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவில் அதிகபட்சமாக சிற்றார் 1-ல் 90.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதுபோன்று பூதப்பாண்டி- 5.2, பேச்சிப்பாறை- 49.6, பெருஞ்சாணி- 5.4, புத்தன் அணை- 4.2, சிற்றார் 2- 62.6, தக்கலை- 2, பாலமோர்- 15.2, திற்பரப்பு- 18.3, மாம்பழத்துறையாறு- 4, அடையாமடை- 7, முள்ளங்கினாவிளை- 17.4, முக்கடல் அணை- 4.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 317 கனஅடி நீர் வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 95 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக முக்கடல் அணைக்கு வினாடிக்கு 50 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 317 கனஅடி நீரும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 331 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 8.6 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


Next Story