மதுரையில் பலத்த மழை


மதுரையில் பலத்த மழை
x

மதுரையில் பலத்த மழை பெய்தது.

மதுரை

கடந்த சில நாட்களாக மதுரையில் வெயில் சுட்டெரித்தது. தமிழகத்திலேயே அதிகபட்ச வெயில் மதுரையில் பதிவானது. வெயில் ஏற்படுத்திய உஷ்ணத்தை தணிக்க மழை வராதா என மக்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் நேற்று மாலையில் திடீர் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்ததால் சாலைகளில் ஆறுபோல் மழைநீர் ஓடியது. இதனால் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மதுரை வசந்த நகர் பகுதியில் மழைநீரில் சென்ற வாகனங்களை படத்தில் காணலாம். இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story