மருங்காபுரி பகுதியில் பலத்த மழை


மருங்காபுரி பகுதியில் பலத்த மழை
x

மருங்காபுரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

திருச்சி

துவரங்குறிச்சி:

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மருங்காபுரி தாலுகாவை சுற்றி பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story