நெல் விதைகளை தூவிய நிலையில் நயினார்கோவில் பகுதியில் பலத்த மழை


நெல் விதைகளை தூவிய நிலையில் நயினார்கோவில் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் சுற்றிய பல கிராமங்களில் விவசாய நிலங்களில் உழவு செய்து விதைநெல்களை தூவிய நிலையில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்

நயினார்கோவில் சுற்றிய பல கிராமங்களில் விவசாய நிலங்களில் உழவு செய்து விதைநெல்களை தூவிய நிலையில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். அதுபோல் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழையே இல்லாததால் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

வைகை தண்ணீர் இருந்த கிராமங்களில் மட்டுமே நெல் விளைச்சல் நன்றாக இருந்தது. மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயம் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு விட்டன.

மழை பெய்தது

இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பருவமழை சீசனை எதிர்பார்த்து தற்போது விவசாயிகள் விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் உழவு செய்து விதைநெல்களை தூவும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விதை நெல் தூவும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் நயினார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்ததால் பல விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது.

விவசாய நிலங்களில் உழவு செய்து விதை நெல் தூவி வரும் நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போன்று தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்து வருகின்றனர்.

1 More update

Next Story