பல்லடம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை


பல்லடம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை
x

பல்லடம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை

திருப்பூர்

பல்லடம்

பல்லடத்தில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் மாலை வரை மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இரவு சுமார் 8 மணி அளவில் பெய்ய துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதிலே அவர்களுக்கு விடிந்து விட்டது. இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள கள்ளகிணரில் மழையினால் 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது .இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக உப்பாறு அணையில் 84 மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 50 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--

1 More update

Next Story