பந்தலூர் பகுதியில் பலத்த மழை
பந்தலூர் பகுதியில் பலத்த மழை
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர், மேங்கோரேஞ்ச், சேரம்பாடி, எருமாடு, தாளுர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, அம்பலமூலா, பாட்டவயல், பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை, தேவாலா உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பந்தலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கூடலூர், சுல்தான்பத்தேரி, கோழிக்கோடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால் மின்கம்பிகளின் மேல் மரங்கள், மரக்கிளைகள் சாய்ந்து விழுந்து மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story