புதுக்கோட்டையில் பலத்த மழை
புதுக்கோட்டையில் பலத்த மழை பெய்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ. அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற அரசு விழா பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ஆதனக்கோட்டை-21, பெருங்களூர்-69, புதுக்கோட்டை-39, ஆலங்குடி-32, கந்தர்வகோட்டை-14, கறம்பக்குடி-8.20, மழையூர்18.60, கீழணை-15.40, திருமயம்-3, அரிமளம்-14.20, அறந்தாங்கி-17.30, ஆயிங்குடி-23.40, நாகுடி-22.40, மீமீசல்-12.20, ஆவுடையார்கோவில்-4.40, மணமேல்குடி-27, இலுப்பூர்-2, குடுமியான்மலை-10, அன்னவாசல்-66, உடையாளிப்பட்டி-4.50, கீரனூர்-22.60, பொன்னமராவதி-13.40, காரையூர்-2.