புதுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த மழை
புதுக்கோட்டையில் கொட்டித்தீர்த்தது மழை.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்தது. மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. புதுக்கோட்டை கீழ ராஜ வீதி உள்பட கடைவீதிகளில் சாலையோர கடைகள் பாதிக்கப்பட்டன. தார்ப்பாய் போட்டு பொருட்களை பாதுகாத்தனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு விழாவில் மழையில் நனையாமல் இருக்க நாற்காலிகளை சிலர் குடையாக பயன்படுத்தினர். மேலும் பதாகைகளை தலையில் போா்த்தி குடையாக பயன்படுத்தி சென்றதை காணமுடிந்தது.
Related Tags :
Next Story