தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x

தஞ்சையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இ்ந்த நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் மழைபெய்வதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளையொட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

பலத்த மழை கொட்டியது

மாலை 6.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த திடீர் மழை காரணமாக வெளியே சென்று இருந்தவர்கள் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

அதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்திருந்த இடங்களில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வந்தன. இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாஞ்சிக்கோட்டை

நாஞ்சிக்கோட்டை, மருங்குளம், குருங்குளம், ஏழுப்பட்டி, மின்னாத்தூர், ஈச்சங்கோட்டை, விளார், புதுப்பட்டினம், சொக்களை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 2-வது நாளாக இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழை குறுவை சாகுபடி மற்றும் சோளம், கரும்பு ஆகியவற்றுக்கு மிகவும் உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story