தா.பேட்டையில் பலத்த மழை


தா.பேட்டையில் பலத்த மழை
x

தா.பேட்டையில் பலத்த மழை பெய்தது.

திருச்சி

தா.பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தா.பேட்டை பகுதியில் நேற்று வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் இரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருச்சியில் நள்ளிரவில் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.


Next Story