அணை பகுதியில் கனமழை
பேச்சிப்பாறை அணை பகுதியில் கனமழை
கன்னியாகுமரி
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பேச்சிப்பாறை உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. கடந்த 1-ந் தேதி பேச்சிப்பாறை அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. நேற்று மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்துப் பகுதிகளான கீழ்கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை, மாங்காமலை, கிளவியாறு போன்ற இடங்களில் கன மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதுபோல், களியல், சிற்றாறு, சிவலோகம், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, பெருஞ்சாணி, சுருளகோடு போன்ற பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. இதனால், இந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story