மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் இருந்து விடாது மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. அரியலூர் நகரில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் குறைவாக இருந்தது. கடைகளிலும் விற்பனை குறைவாக இருந்தது. குடை வியாபாரம் அதிகமாக நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அரியலூர்-16.4, திருமானூர்-9.4, ஜெயங்கொண்டம்-25, செந்துறை-13, ஆண்டிமடம்-19.1.
ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைவீதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தாழ்வான பகுதி மற்றும் வரத்து வாய்க்கால்களில் மழை நீர் சென்று ஏரி, குளங்கள் நிரம்பின.