தேனியில் பலத்த மழை:சாலையில் வேரோடு சாய்ந்த மரம்:பெண் காயம்


தேனியில் பலத்த மழை:சாலையில் வேரோடு சாய்ந்த மரம்:பெண் காயம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெய்த பலத்த மழை காரணமாக பெரியகுளம் சாலையில் மரம் ஒன்று வேராடு சாய்ந்து விழுந்தது.

தேனி

தேனியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பெரியகுளம் சாலையில் தனியார் பள்ளி அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக அல்லிநகரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் (வயது 35) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

மரம் விழுந்த போது அதில் இருந்த ஒரு கிளை, ஆனந்தியின் நெற்றியில் உரசியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கிடையே மரம் விழுந்ததால் பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

1 More update

Related Tags :
Next Story