திருவண்ணாமலையில் பலத்த மழை
திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிப்பட்டனர். இரவு 7 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த மழை 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பின்னர் இரவில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோல கீழ்பென்னாத்தூர் பகுதியிலும் 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story