திருப்பத்தூரில் பலத்த மழை


திருப்பத்தூரில் பலத்த மழை
x

திருப்பத்தூரில் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் நேற்று காலை முதல் மாலை வரை பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து இரவு 7 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திடீரென பெய்த மழையினால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.


Next Story