வால்பாறையில் பலத்த மழை
வால்பாறையில் பலத்த மழை
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சந்தை நாள் ஆகும். இதையொட்டி அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்தும் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நகருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பலத்த மழை பெய்தது. நகராட்சி மார்க்கெட் பகுதியில் நடைபாதை படிக்கட்டு மற்றும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே ஒதுங்கினர். மேலும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வியாபாரம் பாதிக்கப்பட்டது. இது தவிர வால்பாறையை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story