கரூர், வேலாயுதம்பாளையத்தில் சாரல் மழை


கரூர், வேலாயுதம்பாளையத்தில் சாரல் மழை
x

கரூர், வேலாயுதம்பாளையத்தில் சாரல் மழை பெய்தது.

கரூர்

கரூர் மற்றும் வேலாயுதம்பாளையத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் சுமார் ½ மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Related Tags :
Next Story