மிக்ஜம் புயல்: சென்னையில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை...!


தினத்தந்தி 4 Dec 2023 7:52 AM IST (Updated: 4 Dec 2023 9:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் வேகமெடுத்து நகர்ந்து வருகிறது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதிகாலை தீவிரமடைந்த கனமழை தற்போதும் நீடித்து வருகிறது.

சென்னை எழும்பூர், மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, புரசைவாக்கம், வடபழனி, ஆலந்தூர், அசோக்நகர், வடபழனி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.


Next Story