சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை...!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம், பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாபேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், ராயப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அலுவலகம் செல்வோரும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.