தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
x

Photo Credit: PTI

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நாளை (திங்கட்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலுக்கு விடை கொடுக்கும் வகையில், கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உக்கிரமாக இருந்த கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால், கோடை வெயிலின் கோரத் தாண்டவத்துக்கு சற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Related Tags :
Next Story